குவைத்தில் வீட்டு வேலை 500 பெண்களுக்கு வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு - KalviseithiDaily

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Saturday, November 27, 2021

குவைத்தில் வீட்டு வேலை 500 பெண்களுக்கு வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டுவேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு குவைத் நாட்டின் குவைத் கேட் பவுண்டேஷன் என்ற நிறுவ னத்திடமிருந்து குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு 30 வயது முதல் 40 வயதுக்குட் பட்ட பெண் பணியாளர்கள் 500 பேர் தேவைப்படுவதாக கடிதம் எழுதியது.அக்க டிதத்தை தொடர்ந்து குவைத் கேட்பவுண் டேஷன் நிறுவனத்துடன் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 17ம் தேதி அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி வீட்டு பெண் பணியாளர்க ளாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனு பவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம் 832,000 மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ?29,500 வழங்கப்படும். வயது வரம்பு 30 முதல் 40 வரையாகும். மேலும் மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம்,காப்புறுதி மற்றும் இதரசலுகை கள் குவைத் நாட்டின் சட்டவிதிகளுக்குட் பட்டுவேலை அளிப்பவரால் வழங்கப்படும். மாத சம்பளம் தவறாமல் வழங்கப்படுவது டன், வேலைக்கான ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும். ரத்து செய்யாத பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தையோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை அணுகலாம்.

எனவே குவைத் நாட்டில் வீட்டு பெண் பணியாளராக பணியாற்ற விருப்பம் உள் ளவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகி யவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaidkuwait21@ gmail.com என்ற மின்னஞ்ச லுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட வேலைக்கான விவரங்களை இந்நிறுவ னத்தின் வலைதளம் WWW. omcmanpower.com மூல மாகவும், இந்நிறுவன தொலைபேசி எண்கள் 044-22505886/044-22500417 மூலமாகவும் அறிந்து கொள் ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot