வகுப்புகளை ஆன்லைன் நடத்திவிட்டு திடீரென நேரடி தேர்வு வைப்பதா என மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. சில கல்லூரிகளில் ஆன்லைனில் தேர்வுகளும் நடத்தப்பட்டன. கொரோனா கட்டுக்குள் வந்ததால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வை மாணவர்கள் புறக்கணித்தனர், வகுப்புகளை ஆன்லைனில் நடத்திவிட்டு தேர்வுகளை மட்டும் நேரடியாக எழுத சொல்வதா என கேள்வி எழுப்பிய மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென அறிவிக்கப்பட்ட நேரடியாக தேர்வுக்கு தாங்கள் மனதளவில் தயாராகவில்லை என்று கூறும் மாணவர்கள் இந்த ஒரு முறை மட்டும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். கற்றல் குறைபாடுகள் உள்ள போது, திடீர் நேரடி தேர்வை தங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செமஸ்டர் தேர்வுகள் தற்காலிகமாக 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.