பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் இன்டர்னல் மதிப்பெண் அளிப்பதில்லை தேர்ச்சி பெற முடியாமல் தனித்தேர்வர்கள் அவதி

தமிழகத் தில் பல்வேறு காரணங்க ளினால்பள்ளியில்இருந்து பாதியில் நின்றவர்கள் மற்றும் வேலைக்கு செல் லும் நபர்கள் என பலர் ஒவ்வொரு வருடமும், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடங்களை தனித்தேர் வர்களாக தேர்வு எழுதி வருகின்றனர்.

இதில், தேர்ச்சி பெறு வதால் அவர்கள் கல்லூரி படிக்கவும், வேலையில் சேரவும் வாய்ப்பு ஏற்படு கிறது. பிளஸ்-1 பொதுத் தேர்வு அறிவிப்பிற்கு முன்பு வரை தனித்தேர் வர்கள் முழு மதிப்பெண் களுக்கு தேர்வு எழுதி வந்துள்ளனர். பொதுத் தேர்வு அறிவிப்புக்குபிறகு தனித்தேர்வர்களுக்கு எழுத்து தேர்வு 90 மதிப் பெண்களுக்கு நடத்தப்ப டுகிறது. 10 மதிப்பெண் இன்டர்னல் மதிப்பெண் என அளிக்கப்படுகிறது. மேலும், எழுத்து தேர் வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் 200 மதிப் பெண்ணிற்கு கணக்கீட்டு ரிசல்ட் வெளியிடப்படு கிறது.

இத்நிலையில், அரசு தேர்வுகள் இயக்சுகம் தனித்தேர்வர்களுக்குஇன் டர்னல்மதிப்பெண்ணாக 10-ஐஅளிப்பதில்லைஎன வும்,நேரடியாகபள்ளியில் படிக்கும் மாணவர்க ளுக்கு மட்டுமே இன்டர் னல் மதிப்பெண் வழங் குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி, தனித்தேர்வர்கள் எழு

தும் 90 மதிப்பெண்களை நூறு மதிப்பெண்ணாக கணக்கிட்டு மதிப்பெண் வழங்குவதாகதேர்வர்கள் புகார்தெரிவித்துள்ளனர். இதனால் பலர் தேர்ச்சி அடைய முடியாத நிலை ஏற்படுவதாக பாதிக்கப் பட்டவர்கள் கூறுகின்ற னர்.

இது குறித்து கோவை காரமடை கிராமம் குட் டையூர் பகுதியை சேர்ந்த பூபதி (40) என்ற பெண் தனித்தேர்வர் கூறியதா வது: எனது கணவர் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.எனக்கு ஒருமகள் உள்ளார். அவர் பிளஸ்2 படித்து வருகி றார். நான் கம்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வருகிறேன். பள்ளி படிக் கும்போது பல்வேறு கார ணங்களினால் பிளஸ்-2 தேர்வு எழுதவில்லை; இந்நிலையில், கடந்த இரண்டுதனித்தேர்வராக பிளஸ்-2 அக்வுண்ட்ஸ், வணிக கணிதம் தேர்வு எழுதினேன்.

இதில், அக்வுண்ட்ஸ் பாடத்தில் தேர்ச்சி பெற் றேன். வணிக கணிதம் பாடத்தில் 90-க்கு 28 மதிப் பெண் எடுத்து தோல்வி அடைந்தேன். இதனால், தொடர்ந்து தற்போது நடந்த பொதுத்தேர்வில் பங்கேற்று எழுதினேன். இதிலும். எனக்கு 28 மதிப் பெண் பெற்றுள்ளேன். இதனை 200-க்கு மாற்றி 56 என அளித்துள்ளனர். இன்டர்னல் மதிப்பெண் 10 அளிக்கவில்லை. மறுகூட்டலுக்குவிண்

ணப்பிக்க முயன்றபோது, அதிகாரிகள் இன்டர்னல் மார்க் வராது என தெரி வித்தனர். இன்டர்னல் மதிப்பெண் 10 அளித்து இருந்தால், நான் 90-க்கு 38 மதிப்பெண் எடுத்து இருப் பேன். என்னை போல் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கோவை அதிகாரிகளி டம் கேட்டபோது, பள் ளியில் படிக்கும் மாண வர்களுக்கு மட்டுமே இன்டர்னல் மதிப்பெண் அளிக்கப்படும் என தெரிவிக்கின்றனர். எங் களை போல் தனித்தேர் வர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண் அளிக்க தேர் வுத்துறை இயக்குனரகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கு னர்சேதுராமவர்மாகூறு கையில், “தனித்தேர்வர் கள் 90 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி, அவர்கள் எடுக்கும் மதிப்பெண் 100 க்கு மாற்றப்படுகிறது.

அவர்களுக்கு இன்டர் னல் மதிப்பெண் அளிக்க வாய்ப்பு இல்லை. நேர டியாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மட் டுமே இன்டர்னல் மதிப் பெண் அளிக்க முடியும். அவர்களுக்கும் முழு மதிப்பெண் கிடைப்பது இல்லை. மாணவர்க ளின் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப் பெண் வழங்கப்படுகிறது" என்றார்.
Post a Comment (0)
Previous Post Next Post