இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 10 இடங்களில் புதிய கல்லூரிகளுக்கான பணிகள் இந்த ஆண்டுக்குள் தொடங்கும் என்று துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 10 புதிய கல்லூரிகள், ஒரு சித்த மருத்துவமனை தொடங்குவதற்கான பணிகள் குறித்து கல்வியாளா்களுடன் ஆலோசனைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியது:
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின் போது, இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் சென்னை கொளத்தூா், கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, வேலூா் அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் லால்குடி, தென்காசி மாவட்டம் கடையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் புதிதாக கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பழனியில் சித்த மருத்துவமனை தொடங்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையில் முதன் முதலாக சிறந்த கல்வியாளா்களைக் கொண்டு கல்விக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்களுடைய ஆலோசனையின் பேரில் கல்வி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்லூரியில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவ, மாணவிகள் நலனைக் கருத்தில் கொண்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. கல்லூரி தொடங்குவதற்கான இடம் தோ்வு, உள்கட்டமைப்பு மேம்பாடு, அடிப்படை வசதிகள், ஆசிரியா் நியமனம், மாணவா் சோ்க்கை உள்ளிட்ட பணிகளை மக்கள் நல பிரதிநிதிகள் துரிதப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.
இந்தக் கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.