இந்தியாவில் வேறு எங்கும் இல்லை... நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கான மனநல ஆலோசனை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தொடங்கப்பட்ட நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கான மனநல ஆலோசனை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் 104வது பிறகு பிறந்த நாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எம்ஆர்கே பன்னீர் செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட மனநல ஆலோசனை திட்டத்தில் முதல் நாளே 364 மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ் தினமும் 5000 ஆயிரம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின், அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த பின் தகவல் தெரிவிக்கப்படும் என சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 4 லட்சத்து 93,544 பேர் பயன்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post