தமிழக பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சனிக்கிழமை விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துள்ளதை அடுத்து மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. செப்டம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன் படி செப்டம்பர் 1 முதல் தமிழகம் முழுவதும் 9 முதல்12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் பயிற்சிகளை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் திறக்கபட வேண்டிய பள்ளிகள் கொரோனா அச்சம் காரணமாக செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டுள்ளது. கால தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் பாடதிட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால் வாரத்தில் 6 நாட்கள் பள்ளி செயல்படுகிறது. சனி கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது வழக்கம் ஆனால் தற்போது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதில்லை. தற்போது தமிழக பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்த வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுமா?என்ற என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post