குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் வணிகம், பொருளாதாரம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் இந்தியாவின் தனித்திறன் படைத்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை விபரம்:$5000 முதல் $20,000 கல்வி கட்டணம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அவர்கள் படிப்பு காலத்தில் பிரத்யேக கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்பது உட்பட பல சிறப்பு சலுகைகளை பெறவர். முதல் மற்றும் இரண்டாவது செமஸ்டர் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதிகள்:இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். ஏற்கனவே, கல்விக்கட்டணத்திற்கான இதர உதவித்தொகையை பெற்ற மாணவர்கள், ஒரே நேரத்தில் இந்த உதவித்தொகையையும் பெற இயலாது. மேலும், குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும். ஆனால், முன்பே இப்பல்கலைக்கழத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் ஐ.இ.எல்.டி.எஸ்., அல்லது டோபல் ஆகிய ஆங்கில மொழிப் புலமை தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:பல்கலைக்கழத்தின் மாணவர் சேர்க்கை கடிதத்துடன், மாணவரது சுயவிபரம், ஆயிரம் வார்த்தைகளில் நோக்க அறிக்கை, குறிக்கோள் விளக்க கடிதம், ஆசிரியர் அல்லது நிறுவனத்திடம் இருந்து பெற்ற ’ரெபரன்ஸ்’ கடிதம் ஆகியவற்றுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:முதல் செமஸ்டர் - நவம்பர் 30இரண்டாவது செமஸ்டர் - மே 30 விபரங்களுக்கு:
இணையதளம்: https://scholarships.uq.edu.au/scholarship/india-global-leaders-scholarship இ-மெயில்: scholarships@bel.uq.edu.au