எந்த வகை குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும்?



எந்த வகை குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும்?

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அரிசி, சா்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் அரிசி, சா்க்கரை மற்றும் ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.2 ஆயிரத்து 193 கோடி செலவிடப்படவுள்ளது.

அரிசி, சா்க்கரை ஆகியன தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் வழியாக, பச்சரிசி கிலோவுக்கு ரூ.35.20 என்ற விலையிலும், சா்க்கரை கிலோவுக்கு ரூ.39.27 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. இவை 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளன. அதன்படி, பச்சரிசிக்கு ரூ.77 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரத்து 638-ம், சா்க்கரைக்காக ரூ.86 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரத்து 340-ம் செலவிடப்படவுள்ளது.

இத்துடன் 2.19 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரொக்கத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.2,193 கோடியே 33 லட்சத்து 42 ஆயிரம் செலவிடப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக மொத்தமாக, ரூ.2356 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 978 செலவிடப்படவுள்ளது.

எந்த வகை குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்?

அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் பெற முடியும். சர்க்கரை குடும்ப அட்டைத் தாரர்கள் மேற்கண்ட பொங்கல் தொகுப்பை பெற முடியாது.

அதாவது, பிஎச்எச் மற்றும் பிஎச்எச்-ஏஏஒய் உள்ளிட்ட அட்டைத்தாரர்கள் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் பெற முடியும்.

பிஎச்எச்-ஏஏஒய் என குறிப்பிடப்பட்டிருக்கும் அட்டைத்தாரர்கள் 35 கிலோ அரிசி மற்றும் அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

என்பிஎச்எச்-எஸ் மற்றும் என்பிஎச்எச்-என்சி என குறிப்பிடப்பட்டிருக்கும் அட்டைத்தாரர்கள் எந்தப் பொருள்களும் வழங்கப்படாது.

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Comments

  1. எல்லா ரேசன் அட்டைகள் உரிய யவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கலாம்.

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post