10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி இரண்டு செமஸ்டர் தேர்வுமுறை

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி இரண்டு செமஸ்டர் தேர்வுமுறை'

ஆந்திராவின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல், இரண்டு செமஸ்டர் தேர்வு முறை நடைமுறைக்கு வரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, டிசம்பர் 17, சனிக்கிழமையன்று அம்மாநில அரசு உத்தரவை வெளியிட்டது. அதில், ஆந்திராவின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் தேர்வுமுறை நடைமுறைக்கு வரும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024 - 25-களில் இரண்டு செமஸ்டர் தேர்வுமுறை நடைமுறைக்கு வரும். தேர்வு

ஆந்திராவின் அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டம் 2022-23-ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்து வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் இரண்டு செமஸ்டர் தேர்வு முறை குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திறம்படச் செயல்படுத்த மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு செமஸ்டர் தேர்வுமுறை மூலமாக, மாணவர்கள் தேர்வுகளுக்கு குறைவான பாடத்திட்டத்தைப் பயில்வதால் மனஅழுத்தம் குறைவதோடு, கற்பிக்கும் கலாசாரமும் மாறும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதோடு ஆந்திர மாநிலத்தில் உள்ள பள்ளிக் கல்வியின் அனைத்து மண்டல இணை இயக்குநர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், சமக்ர சிக்ஷாவின் கூடுதல் திட்ட ஒருங்கிணைப் பாளர்களுக்கு இரண்டு செமஸ்டர் முறையைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post