தமிழ் வழி படிப்பை அதிகரிக்க நான் முதல்வன் திட்டம் - அமைச்சர் பொன்முடி

தமிழ் வழி படிப்பை அதிகரிக்க நான் முதல்வன் திட்டம்

அமைச்சர் பொன்முடி மேலும் கூறியதாவது: தமிழ் வழியில் இன்ஜினியரிங் சேர்க்கை அதிகாரிக்க நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பாடதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் வழியில் அவற்றை கற்று கொடுக்கும்பொழுது அவர் களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வருகின்ற காலங்களில் தமிழ்வழி இன்ஜினியரிங் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும். வேலை வாய்ப் புகள் பெறவேண்டுமென்றால் தமிழில் தேர்வு எழுத வேண்டும். எனவே அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடி

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருப்பதாவது:

பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் விவகாரத்தில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம்கொண்டுவரப்படும்.

அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே மாதிரியான மொழிப்பாடம்(தமிழ் மற்றும் ஆங்கிலம்) கொண்டு வரப்படும். ஆராய்ச்சி படிப்பிற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஊழல் செய்கிறது என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ் மக்களுக்கு யார் ஊழல் செய்கிறார்கள் என்பது தெரியும் என்று கூறினார்
Post a Comment (0)
Previous Post Next Post