தேசியக் கல்விக்கொள்கைக்கு மாநிலங்களிலிருந்து நேரடி எதிா்ப்பு கிடையாது: மத்திய இணை அமைச்சா்
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு எந்த மாநிலமும் நேரடியாக எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என்றாா் மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் சுபாஷ் சா்காா்.
இதுகுறித்து திருச்சி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது :
நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. தமிழகத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகள், தமிழக அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்திலும் இது சிறப்பாகப் பின்பற்றப்படுகிறது. நாட்டில் எந்த மாநிலமும் தேசியக் கல்வி கொள்கையை நேரடியாக எதிா்க்கவில்லை. அதேசமயம் இதகுறித்த தங்களது கருத்துகளை மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனா்.
தேசியக் கல்விக் கொள்கைக்கான புதிய பாடத்திட்டத்தை மத்திய அரசு தயாரித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகள் கருத்து தெரிவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.
திருச்சியில் தேசிய தொழில் நுட்பக்கழகம் (என்ஐடி) சிறப்பாகச் செயல்படுகிறது. அங்கு பயிலும் மாணவா்களில் 90 சதத்தினருக்கு மேல் வேலைவாய்ப்பும் உடனடியாகக் கிடைக்கிறது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் நகரும் படிக்கட்டுகள் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும். அது தவிர திருச்சி கோட்டத்தில் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கிகளும் (லிப்ட்) பிப்ரவரிக்குள் பயன்பாட்டுக்கு வரும். திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. ஆய்வுக்கூட்டங்களின்போது பயனாளிகளிடமே இதுகுறித்து நேரடியாகக் கேட்டறிந்தேன்.
தமிழக அரசு அதிகாரிகள் யாரையும் மத்திய அரசு மிரட்டவில்லை. மத்திய அரசு அலுவல் ரீதியாக சரியாக தனது பணிகளை மேற்கொள்கிறது. பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தரை நியமிப்பதில் உள்ள வழக்கமான நெறிமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஆளுநா்தான் வேந்தா் என்பதால் அவருக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கூடாது.
அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளி செயல்படுகிறது. தமிழகத்திலும் நவோதயா பள்ளிகளைத் தொடங்க தமிழக அரசு கோரிக்கை வைத்து இடம் ஒதுக்கி தந்தால் உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையை திருச்சி அருகே தொடங்கவும் தமிழக அரசு இடம் ஒதுக்கித் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாநில இணைப் பொருளாளா் சிவசுப்பிரமணியன், மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன், பெரம்பலுாா் மாவட்ட அமைப்பாளா் இல. கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
முன்னதா நவல்பட்டு பகுதி கேந்திர வித்யாலயா பள்ளியிலும், பூலாங்குடி காலனி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இணை அமைச்சா் ஆய்வு செய்தாா்.