மொபைல் பே செயலிக்கு உயர் நீதிமன்றம் தடை
- Madras High Court bans Mobile Pay money transaction app
வர்த்தக சின்னம் மீறல் தொடர்பான வழக்கில் மொபைல் பே பணப் பரிவர்த்தனை செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
போன் பே என்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் தீர்ப்பு அளித்துள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு செயலிகளின் சின்னங்கள் மற்றும் இலட்சினைகள் பொதுமக்கள் பார்வைக்கு ஒரே மாதிரியாக தெரிய வாய்ப்புள்ளதாகக் கூறி மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.