ITR ஆன்லைன் வெரிஃபிகேஷனுக்கான அவகாசம் குறைப்பு.. உடனே ரிட்டன் தாக்கல் செய்துவிடுங்கள்!

ITR Return | வருமான வரி ரிட்டன் (ITR) ஆன்லைன் வெரிஃபிகேஷனுக்கான அவகாசத்தை 120 நாளிலிருந்து 30 நாள்களாக மத்திய அரசு குறைந்துள்ளது.

2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31, 2022வுடன் முடிவடைந்துவிட்டது. சென்ற ஆண்டு வருமான வரித்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டும் மத்திய அரசு கால அவகாசம் வழங்கும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால் மத்திய அரசு அவகாசத்தை நீட்டிக்காத நிலையில் 3 நாள்களுக்கு முன்னதாக வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்தது. ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாயை தாண்டும் அனைவரும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர் மூலம், ஒரு நபர் வருமான வரித்துறைக்கு அந்த ஆண்டில் செலுத்த வேண்டிய வருமானம் மற்றும் செலுத்த வேண்டிய வரிகள் பற்றிய தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி கடந்த ஜூலை 31 அன்று 72.42 லட்சம் வருமான வரிக்கணக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருமான வரி ரிட்டன் ஆன்லைன் வெரிஃபிகேனுக்காக ( ITR E-verification) அவகாசத்தை 120 நாள்களிலிருந்து 30 நாள்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இந்த விதி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ள நிலையில், 30 நாள்களுக்குள் வருமான வரி ரிட்டன் சமர்ப்பிக்க வெண்டும். இல்லாவிடில் வருமான வரித்தாக்கல் செய்யவில்லை என மத்திய அரசு மூலம் அறிவிக்கப்படும்.

எனவே வருமான வரி ரிட்டன் ஆன்லைனின் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நீங்கள் நிச்சயம் அறிந்துக்காள்ள வேண்டும். இதோ அதன் விபரங்கள்.. 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31 வுடன் முடிவடைந்தது.

ஆன்லைன் வாயிலாக வருமான வரி ரிட்டன் சரிபார்க்க மற்றும் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 1 முதல் 30 நாள்களுக்குள் செய்ய வேண்டும். ரிட்டன் தாமதமாகவே அல்லது குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

ஒருவேளை வருமான வரி ரிட்டனை ஹார்ட் காப்பியில் அனுப்ப விரும்புவோர், speed post மூலம் மட்டும் Centralised Processing Centre, Income Tax Department, Bengaluru-560500, Karnataka என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை மத்திய அரசு அறிவித்துள்ள 30 நாட்களுக்கு மேல் தபாலில் அனுப்பப்படும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் மத்திய அரசு தற்போது வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டது, மற்றும் வருமான வரி தாக்கல் அவகாசம் வழங்கப்படாதது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை வருமான வரித்தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை இறுதி நாளில் 9-10 சதவீதம் அதிகரித்தது. இதன் படி ஒருநாளில் 50 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment (0)
Previous Post Next Post