ஆசிரியை கண்டித்ததால் பள்ளி 2ம் மாடியிலிருந்து குதித்து மாணவி படுகாயம்

ஆசிரியை கண்டித்ததால், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த 9ம் வகுப்பு மாணவி, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தைச் சேர்ந்த மீனவ தம்பதியின், 14 வயது மகள், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார்.இவர், ஏழாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி பயின்று, 8ம் வகுப்பில் இப்பள்ளியில் சேர்ந்தவர்.படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோரும், தமிழ் பாடத்தை கவனமாக படிக்கும்படி தமிழாசிரியையும் கண்டித்துள்ளனர். இதில் விரக்தியடைந்த மாணவி, கடந்த வாரம் வீட்டில், அதிக மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பள்ளியில் நேற்று, பயிற்சி தேர்வு நடந்தது. இது தொடர்பாக மாணவியை, தமிழ் ஆசிரியை கண்டித்துள்ளார். பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.மன வேதனையடைந்த மாணவி, மதிய உணவு இடைவேளையில், பள்ளி கட்டடத்தின் இரண்டாம் மாடியில் இருந்து குதித்தார்.ஆசிரியர்கள் மீட்டு, மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவ சோதனையில், மாணவியின் முதுகெலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரிந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க | G.O (D) No. 144 Dt: July 13, 2022 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2022-2023-ஆம் ஆண்டு பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் –தாட்கோ மூலம் செயல்படுத்துதல் – ரூ. 20.00 கோடி – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது

செங்கல்பட்டு முதலாவது நீதிமன்ற நீதிபதி ரீனா, மாணவியிடம் வாக்குமூலம் பெற்றார்.தலைமையாசிரியை தெமினா கிரேனாப்பிடம், மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன் விசாரித்தனர்.
Post a Comment (0)
Previous Post Next Post