கொரோனாவால் வேலை இழந்தவர்களையும், படித்த இளைஞர்களையும் குறிவைத்து, 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு மோசடி அதிகளவில் நடக்கிறது.ஒரு இணையதளம் அல்லது செயலியை பயன்படுத்த, ஒவ்வொருவரும் தங்களை பற்றிய முழுமையான தகவல்களை அளிக்கின்றனர்.
அவர்கள் இணையதளத்தில் ஒன்றை தேடும்போது, அவர்களுக்கான தேவையறிந்து, போலி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.குறிப்பாக, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்'களில் பரவும் போலி விளம்பரங்களில் கொடுக்கப்படும் மொபைல் போன் எண்களை நம்பி, வேலை தேடும் இளைஞர்கள் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக, 'வீட்டில் இருந்தபடியே, ஆன்லைனில் வேலை பார்க்கலாம்' என்ற விளம்பரங்களை நம்பி, வேலையில் சேருவோரிடம், 6,000 ரூபாய் முன்பணமும், உழைப்பையும் பெற்று ஏமாற்றுகின்றனர். ஆசைவார்த்தை
இதுகுறித்து, ஏமாற்றப்பட்ட சிலர் கூறியதாவது:அமெரிக்கா டாலர் மதிப்பை, இந்திய ரூபாய் மதிப்பு அடிப்படையில் கணக்கீடு செய்து, அவற்றை மாற்றி எழுதி தர வேண்டும் என்றனர். அதன்படி மாதத்திற்கு, 1,500 'பைல்'கள் முடித்தால், மாதம், 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும், மேலும், நீங்கள் செலுத்திய முன்பணம், சிறிது சிறிதாக உங்களது சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் ஆசைவார்த்தை காட்டி சேர்த்தனர். ஆனால், பணியை முடித்த பின், அவர்களின் இணையதளம், 'லாக்' செய்யப்பட்டு விட்டது. அவர்களின் மொபைல் எண்கள், 'ஆப்' செய்யப்பட்டன. கொரோனா
அதேபோல மற்றொரு இணையதளத்தில், ஆங்கில புத்தகத்தின் பிழை திருத்துதல் பணி வழங்கப்பட்டது. அவர்கள் முன்பணம் வாங்காத நிலையில், ஆயிரம் பக்கத்திற்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். பணியை முடித்த பின், 6,000 ரூபாய் வைப்பு தொகை செலுத்தும்படியும், சம்பளத்துடன் வழங்கப்படும் என்றும் கூறினர். சம்பளத்தில் பிடித்து விட்டு கொடுங்கள் என கோரிய போது, அவர்கள் போனை, 'கட்' செய்து விட்டனர்.
அதன்பின், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:'ஆன்லைன்' மோசடிகள் குறித்து, பல செய்திகள் வந்தாலும், அவற்றை நம்பி ஏமாறுவோர் உள்ளனர். வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கலாம்; சம்பளம் வரும் என்ற ஆசையில் ஏமாறுபவர்கள் அதிகமாக உள்ளனர். விளம்பரங்களை நம்பி, வேலைக்காக பணம் செலுத்துவோர், அந்நிறுவனங்கள் எங்கு உள்ளது போன்ற அடிப்படை விபரங்களை கூட அறிய தயாராக இருப்பதில்லை.
இதனால், கொரோனாவுக்கு பின், தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர், ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கியுள்ளனர். இதில், 10 சதவீதம் பேர் மட்டுமே, போலீசில் புகார் அளிக்கின்றனர்.மேலும், மோசடி கும்பலிடம், தங்களது ஆதார், வங்கி கணக்கு போன்றவற்றை வழங்கும் போது, அதன் வாயிலாக, மோசடிக்கு புதிய கணக்கையும் துவங்க முடியும். அந்த கணக்கின் வாயிலாகவும் பலரிடம் மோசடியில் அக்கும்பல் ஈடுபடும். இதுபோன்ற மோசடியில் சிக்கியவர்கள், தயக்கமின்றி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.