10ம் வகுப்பில் 36, 35, 38 மதிப்பெண் எடுத்த கலெக்டர்

10ம் வகுப்பில் 36, 35, 38 மதிப்பெண் எடுத்த கலெக்டர்
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு; மாற்றங்கள் உண்டு. நேற்று ஒரு விதமாக பார்க்கப்பட்டவர்கள், இன்றும் அதேபோல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு காலத்தில் மக்கு மாணவனாக இருந்தவர். பத்தாம் வகுப்பில் கணக்கில் நூற்றுக்கு 36, ஆங்கிலத்தில் 35, அறிவியல் பாடத்தில் 38 மதிப்பெண்கள் எடுத்தவர், இப்போது ஒரு மாவட்டத்துக்கே கலெக்டர் என்றால் நம்ப முடியுமா? முடியும் என்று சாதித்து காட்டி இருக்கிறார் துஷார் சுமேரா. குஜராத்தில் உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பத்தாம் வகுப்பில் இவ்வளவு குறைந்த மதிப்பெண்களை பெற்ற போதும், தளராமல் படித்து, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இப்போது, குஜராத்தில் உள்ள பாரூச் மாவட்டத்தின் கலெக்டராக இருக்கிறார். இவர் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் பட்டியலை சக ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டு இருக்கிறார். இதை கண்ட நெட்டிசன்கள், துஷாரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இந்த பதிவு வெளியான சில மணி நேரத்தில் 17 லட்சம் லைக்குகளை அள்ளி இருக்கிறது.
Post a Comment (0)
Previous Post Next Post