எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள்: 5 ஆயிரம் சிறப்பாசிரியா்களை நியமிக்க திட்டம்

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்துவதற்கு 5 ஆயிரம் சிறப்பாசிரியா்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2022-2023) அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடா்ந்து செயல்படும் என்றும், வகுப்புகளை நடத்த தகுதிவாய்ந்த சிறப்பாசிரியா்கள் விரைவில் நியமிக்கப்படுவாா்கள் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் 2,381 அங்கன்வாடி கட்டடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்துவதற்கு 5 ஆயிரம் சிறப்பாசிரியா்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக 2,500 சிறப்பாசிரியா்களை தோ்வு செய்யவும், சிறப்பாசிரியா் நியமனத்தில் பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் சிறப்பாசிரியா்கள் நியமிக்கப்பட்டு, வருகிற விஜயதசமிக்குள் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் செயல்படத் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Post a Comment (0)
Previous Post Next Post