Atal Tinkering Labs: அடுத்த மூன்று மாதங்களில் நாட்டில் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அடல் புத்தாக்க திட்ட இயக்குனர் சிந்தன் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கில செய்தி தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், " அடுத்து மூன்று ஆண்டுகளில் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். இந்த ஆய்வகங்கள் நெகிழ்வான சூழலில் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். புத்தாக்க இயக்கத்தின் ஐந்தாண்டு காலத்திற்கான தொலைநோக்கு அறிக்கை வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
கடந்த 2015ம் ஆண்டு, அடல் புத்தாக்க இயக்கம் இயக்கம் நித்தி ஆயோக்கின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் கீழ், பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நிருவப்பட்டு வருகின்ற்ன. இதில், 70%க்கும் அதிகமான ஆய்வகங்கள் அரசு/அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள்/பெண்கள் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளதாக நித்தி அயோக் முன்னதாக தெரிவித்தது.
முப்பரிமான அச்சிடுதல் (3D Printing), இணைய தொடர்புகள் ( Internet of Things) , செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில் நுட்பம் ஆகிய 21ம் நூற்றாண்டின் சவால்களை மாணவர்கள் சுய கற்றல் மூலமாக கற்கவும், ஆராயவும், பரிசோதனை செய்யவும் இந்த ஆய்வங்கள் வழி வகை செய்கிறது. அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ், பள்ளிகளில் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைப்பதற்காக ரூ. 20 லட்சம் வரை மானிய உதவி அளிக்கப்படுகிறது. தற்போது, 9000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. 75 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எதிர்காலத்திற்கான திறன்களைப் பெற்று வருகின்றன. 2 லட்சத்துக்கும் அதிகமான முயற்சிகள் இதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அடல் புத்தாக்க இயக்கத்தை (ஏஐஎம்) 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் கீழ், 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை ஏற்படுத்துதல்; 101 அடல் இன்குபேஷன் மையங்களை உருவாக்குதல்;50 அடல் சமுதாய புத்தாக்க மையங்களை உருவாக்குதல்;
அடல் புதிய இந்தியா சவால்களின் மூலம் 200 ஸ்டார்ட் அப்-களுக்கு ஆதரவளித்தல் போன்ற இலக்குகள் திட்டமிடப்பட்டுள்ளன.