தமிழகத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். பத்தாம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும், பிளஸ் 2வி ல் 93.76 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2வில் அதிகபட்சமாக 97.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. தமிழில் ஒருவர் மட்டும் சென்டம் எடுத்தார். பத்தாம் வகுப்பில் 97.22 சதவீத தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்தது.

தமிழகத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

மதிப்பெண் விபரங்களை காலை 10 மணி முதல் மாணவர்கள் இணைய தளங்களில் பார்க்கலாம்.

எஸ்எம்எஸ் மூலமும் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பில் மொத்தம் 90.7 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.

9.12 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி.

பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.

மொத்தம் 8,06,277 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்!

3.84 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

90.96 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

96.32 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது!

பத்தாம் வகுப்பில் மொத்தம் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இணைய தளத்தில் வெளியிட்டார் அன்பில் மகேஷ்.

மதிப்பெண் பட்டியல்கள் வெளியான பின்னர் மாணவர்கள் பொறுமையாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியாக உள்ளது.

மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

- கல்வி அமைச்சர், அன்பில் மகேஷ்

மொத்தம் 4,06,105 மாணவிகள் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 1 மாணவர் சதமடித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.95% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் (97.22%) தேர்ச்சி விகிதம் அதிகம்!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம்!

1 Comments

Post a Comment
Previous Post Next Post