பொது தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு!

மாணவர்களுக்கு, துணை தேர்வு

பொது தேர்வுகளில் பங்கேற்காத, 1.17 லட்சம் மாணவர்களுக்கு, துணை தேர்வு நடத்த ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து, 1.17 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்வில்லை.இவ்வளவு நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும், பங்கேற்க முடியாத காரணங்களை கண்டறிந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு விரிவான அறிக்கை தர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வர்கள் அனைவரையும், ஜூலையில் நடத்தப்படும் உடனடி தேர்வில் பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யுமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது
Post a Comment (0)
Previous Post Next Post