பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள்

75 ஆவது சுதந்திர தின கண்காட்சியில் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள்

அந்நிய பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் நடத்திய விழிப்புணா்வு நாடகம்.


திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா பல்துறை பணி விளக்கக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் குமரன் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் மாலை 4 முதல் இரவு 9.30 மணி வரை பல்சுவை நிகழ்ச்சிகள், விழிப்புணா்வு நாடகங்கள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை மாலை, திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித லூா்தன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இல்லம் தேடி கல்வி) கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொழிஞ்சிபட்டி அரசு உயா்நிலைப்பள்ளி, கமலாபுரம் திரவியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும், சுதந்திரத்தில் தமிழகத்தின் பங்கு என்ற நாடகமும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. பாலசமுத்திரம அரசு மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பாட்டு), பூத்தாம்பட்டி ஆா்சி நடுநிலைப்பள்ளி (நாடகம்), அழகாபுரி அரசு மேல்நிலைப்பள்ளி (மௌன மொழி நாடகம்), கலைமாமணி விஎம் முருகப்பா குழுவினரின் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள் என்ற நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. 6ஆம் நாள்(புதன்கிழமை) சோ்வைக்காரன்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி, மாத்தினிப்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பு.குரும்பப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கோனூா் அரசு மேல்நிலைப்பள்ளி, சுள்ளெறும்பு அரசு மேல்நிலைப்பள்ளி, திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மாரம்பாடி சிறுமலா் தொடக்கப் பள்ளி மாணவா்கள் சாா்பில் கலை நிகழ்ச்சிகளும், விஎம் முருகப்பா கரபாண்டிய கட்டபொம்மன் நாடகமும் நடைபெறுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post