மருத்துவ அறிவியல் குறித்து தாம் கண்டுபிடித்த புதிய கல்வி முறையை இலவசமாக பயிற்றுவிக்க உள்ளதாக சிவா அய்யாதுரை தெரிவித்தார்.முகவூர் தெற்குதெரு நாடார் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் இமெயில் கண்டுபிடிப்பாளர் டாக்டர் சிவா அய்யாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முகவூர் கிராமத்தில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இவர் இந்திய பாரம்பரியத்தில் உள்ள சித்தா, ஆயுர்வேதா, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டங்கள் பெற்றுள்ளார்.அமெரிக்காவில் மருத்துவம், பொறியியல் குறித்த புதிய கல்வியை உருவாக்கி உள்ளார்.
அவர் பேசியது:
அறிவியல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர்களின் கட்டமைப்பு, இந்திய பாரம்பரிய மருத்துவம் இவற்றை இணைத்து மருத்துவ பொறியியல் என்ற புதிய கல்வி முறையை உருவாக்கி அமெரிக்காவில் பயிற்சி வழங்குகிறேன். அதை, நான் பிறந்த இப்பகுதி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்றுவிக்க உள்ளேன், என்றார்.