சித்தா, ஆயுர்வேதம் படிப்பில் சேர வாய்ப்பு

சித்தா, ஆயுர்வேதம் படிப்பு

சுயநிதி மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளில் சேர, மாணவர்கள் வரும் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ பட்டப் படிப்புக்கு, வரும் 18ம் தேதி நேரடி கவுன்சிலிங் நடக்க உள்ளது.'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும், 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முந்தைய கவுன்சிலிங்கில் தாமதமாக விண்ணப்பித்தோர், விண்ணப்பிக்க தவறியோர் இந்த முறை விண்ணப்பிக்கலாம். ஆயுஷ் அமைச்சகம் மாணவர் சேர்க்கை

மேலும், விபரங்களுக்கு https://www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மாணவர் சேர்க்கைக்கான நீட் மதிப்பெண்களை குறைத்துள்ளது. இதன்படி, ஓ.சி., பிரிவுக்கு, 137 முதல் 122; ஓ.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுகளுக்கு 121 முதல் 96 வரையிலும் கட் - -ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post