தொடக்க அனுமதி பெறாமல் 415 தனியார் பள்ளிகள்

தமிழ்நாட்டில் தொடக்க அனுமதி பெறாத நிலையில் 415 தனியார் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளுக்கு புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் தொடக்க அனுமதி பெறவேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுலவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 5 ந் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளியின் அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது தெரிய வந்துள்ளது மெட்ரிக்குலேசன் பள்ளிகள்

தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 25 பள்ளிகள் துவக்க அனுமதி பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் 390 தனியார் பள்ளிகள் துவக்க அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்தப் பள்ளிகளும் வரும் 2022-2023கல்வியாண்டு துவங்குவதற்குள் துவக்க அனுமதியை வாங்க வேண்டும். துவக்க அனுமதி பெறாவிட்டால் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்க அனுமதி அளிக்கப்படாது.
Post a Comment (0)
Previous Post Next Post