இந்திய அறிவியல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை: 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். R(IA)308-2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Project Engineer(Civil)
காலியிடங்கள்: 02

பணி: Site Engineer(Civil) 
காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுர். நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். தொடர்புடைய கட்டுமானத்துறை சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: http://recruitment.iisc.ac.in/nontechnology/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Post a Comment (0)
Previous Post Next Post