11,12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.1: சென்னை ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவில் நிகழாண்டு மே மாதம் பிளஸ் 1 முடிக்கும் மாணவர்களும், தற்போது பிளஸ் 2 படிக் கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதிபெறும் பட்சத்தில் பிளஸ் 2 வகுப்பை முடித்து விட்டு, இந்தப் படிப்பைத் தொடங் கலாம். ஜேஇஇ அட்வான்ஸ்டு (2021) தேர்வுக் குத் தகுதி பெறும் மாணவர்கள், மே மா தம் தொடங்கவுள்ள இந்த பிஎஸ்சி வகுப் பில் சேரலாம். விருப்பமுள்ள மாண வர்கள்,
https://onlinedegree.iitm.ac.in
என்ற இணையதளம் மூலம் ஏப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post