வகுப்பறையாகும் விண்வெளி நிலையம் : ஆன்லைன் கிளாஸ் எடுக்கும் விண்வெளி வீரர்கள்..!!

சீனாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் அறிவியல் பாடம் எடுக்கும் முன் முயற்சியை எடுத்துள்ளனர். டியாங்காங் விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் அங்கிருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுத்தனர். இந்த வகுப்பில் உயிரியல் உயிரணுக்களின் நடத்தை, மைக்ரோ கிராவிட்டியில் இயக்கம், விண்வெளியில் உள்ள வாழ்க்கை மற்றும் டியாங்காங்-ன் விண்வெளியில் உள்ள அம்சங்கள் போன்ற விண்வெளி சம்மந்தமான விஷயங்கள் பலவற்றை பற்றி குழந்தைகளிடம் அவர்கள் உரையாடினார். டியாங்காங் வகுப்பறை என்பது தொடர் முயற்சின் ஒரு பகுதியாக இருக்கும்.

இந்த தொடரின் நோக்கம் சிறு குழந்தைகளுக்கு விண்வெளி மற்றும் அறிவியலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதை பற்றிய ஆர்வத்தை தூண்டுவதுமாகும். சீனாவின் இது போன்ற முயற்சி எடுக்கப்படுவது முதன் முறை அல்ல. 2013ம் ஆண்டில், வாங் யாப்பிங் தனது முதல் விண்வெளிப் பயணத்தின் போது, டியாங்காங்-1 விண்வெளி ஆய்வகத்தில் இருந்தபோது 60 மில்லியன் சீனக் குழந்தைகளுடன் கலந்துரையாடி, பாடம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment (0)
Previous Post Next Post