வரும் 11ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

டிச.9:திரு வண்ணாமலை யில் வரும் IIம் தேதி நடைபெ றும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகா மில் இளைஞர் கள் பங்கேற்று பயன் பெறுமாறு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து, பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட் டுள்ள அறிக்கையில்தெரி வித்திருப்பதாவது: தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் ஆணைப் படி, மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு ஆண் டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல் வர் அறிவித்ததுடன். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, வரும் IIம் தேதி காலை 8 மணிமு தல் மாலை 3 மணிவரை திருவண்ணாமலை தென்மாத்தூரில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில், திருவண் ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் அருணை பொறியியல் கல் லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனி யார்துறை மற்றும் திறன் பயிற்சி ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள் ளது.

இந்த முகாமில் ஆண் கள். பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறேன். முகாமில், 100க்கும் மேற் பட்ட தனியார் நிறுவ னங்கள் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ. பட்டய பயிற்சி. கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரி கள், செவிலியர் பட்டம் பெற்று வேலை நாடுப வர்கள் ஆதார் அட்டை, சுயவிவர குறிப்பு (பையோ டேட்டா) மற்றும் புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேலை வாய்ப்பு முகாமில் பங் கேற்க விருப்பம் உள்ள வர்கள் www.privatejobs. tn.gov.in என்ற இணையத் தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில், 18 வயதிற்கு மேற்பட்ட படித்த இளை ஞர்கள் அனைவரும் பங்கேற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். பணிநியமனம் பெறுபவர் கள் 315ஆயிரம் முதல், 850 ஆயிரம் வரை மாத ஊதி யம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இருந்து வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தரும் இளைஞர்களுக்கு திரு வண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகில், வேலூர் சாலை (தீபம் நகர்) அரு கில் என இரண்டு இடங்க ளில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகா மில் கலந்து கொள்ளும் அனைவரும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், தன்னார்வ லர்கள், வேலை வாய்ப்பு முகாம் குறித்தான கைப் பிரதிகளை மாணவர்கள் இளைஞர்களுக்கு வழங்கி யும், விளம்பர படுத்தியும் வேலை வாய்ப்பு முகாம் வெற்றியடைய ஒத்து ழைக்க கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post