'பள்ளி மாணவி தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் நீடிப்பதால், போலீசார் உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்' என, பெற்றோர் சக மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுபிளஸ் 2 மாணவி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டுதற்கொலை செய்துக் கொண்டார். மாணவி தற்போது மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் இதற்கு முன் ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார்
பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.
தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, 35, தற்கொலைக்கு காரணம் என புகார் எழுந்த நிலையில், அவரை போலீசார் போக்சோ பிரிவில் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 26ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவி புகார் அளித்தும் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், 52, மீதும் நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலைக்கு முன், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் வேறு இருவர் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மற்ற இருவர் மீதும் போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை; அவர்களுக்கும்மாணவிக்கும் என்ன தொடர்பு, பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கோஷமிட்டனர்
பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன் உறவினர்களும், மாணவர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். மாணவியின் வீட்டின் முன்பும், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் அறிக்கை
கோவை மாணவியின் மரணம், மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்மமும், ஒரு உயிரை பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல், பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்கு பின், மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே, இத்தகைய கீழ்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளா