ஆசிரியர் தினம்வாருமோ ? - எங்கள் ஆசை நிறைவேறுமோ?
மாணவர் சமுதாயமோ ? - அது மாறித் தடுமாறுமோ? கல்வி இடம்சேருமோ ? -
அந்த கங்கை கடல்சேருமோ? கானல் நீராகுமோ ?
எங்கள் கல்வி வீணாகுமோ? உண்மை பொய்யாகுமோ? - அது ஊமைக் கனவாகுமோ?
நன்மை நமைச்சேருமோ ? - அது நாளும் சுமையாகுமோ?
காலம் கலிகாலமோ? நல்ல கற்சிலை கல்லாகுமோ?
ஆலம் விழுதாகுமோ ? - அது
ஆயுள் வரைநீளுமோ?
ஏழு எட்டாகுமோ? - கல்வி
எட்டாக் கனியாகுமோ?
ஏக்கம் ஏராளமோ? - கல்வித்
தாக்கம் தாராளமோ ?
ஞானம் கருவாகுமோ ? - புது
ஞாலம் உருவாகுமோ?
ஆசிரியர் தினம்வாருமோ ? - எங்கள்
ஆசை நிறைவேறுமோ?


No comments:
Post a Comment