தொடர்ந்து பள்ளிகள் செயல்படாமல் உள்ளதால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இதனால் உடனடியாக பள்ளிகள் திறக்கபட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோன தொற்றின் 2ம் அலை கடந்த மார்ச் மதம் முதல் பரவி வந்தது. ஆரம்ப கட்டத்தில் மெல்ல தொற்று பதிவுகள் தொடங்கியது. ஏப்ரல் மாத இறுதியில் நாடு முழுவதும் 2ம் அலை மிகவும் தீவிர நிலையை அடைந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் நேரடியாக செயல்படாமல் ஆன்லைன் முறையில் தான் நடந்து வருகிறது. தற்போது பாதிப்புகள் குறைந்து உள்ளதால் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நீலகிரி மாவட்டம் ஆனைகட்டி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது அவசியமான ஒன்று. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி ரீதியாக மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலருக்கும் ஆன்லைன் வழி கல்வி பெறுவதற்கு போதுமான பொருளாதார வசதி இல்லை. மாணவர்கள் பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து இருக்கின்றனர். குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும், பொதுமக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சுகாதார முறைகளை கையாள்வது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட வழிமுறைகளை கடைபிடித்தால் மூன்றாவது அலையின் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்று சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்