தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசுப் பணிக்காக காத்திருப்பவர்கள், அந்த பதிவுகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு புதுப்பித்தல்
தமிழக அரசுத்துறைகளில் பணிபுரிய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்களுக்கு பணியின் பொது முன்னுரிமை அளிக்கப்படுவது உண்டு. அதன் கீழ் இதுவரை லட்சக்கணக்கான பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். மேலும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்திருப்பவர்கள் அந்த பதிவை அடிக்கடி புதுப்பிப்பது அவசியமாகும். இந்நிலையில் 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் தங்களது பதிவுகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் இன்னும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசு வழங்கி வரும் ஊக்கத்தொகையின் அளவும் தற்போது ரூ.2,400 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கான இயற்கை மரண உதவித்தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தியும், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.