உத்திரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் , 11 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வீட்டிலிருந்து 800 மீட்டர் துாரத்தில் உள்ள தனது பள்ளிக்குச் செல்ல தினமும் படகில் செல்கிறார். பள்ளிச்சீருடையில் படகில் பயணம் செய்யும் இந்த மாணவியின் தைரியம் மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு காட்சி வைரலாகி அனைவரது பாராட்டுதலை பெற்று வருகிறது.
இது குறித்து மாணவி சந்தியா சாஹினி கூறியதாவது: கோவிட் தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டது. தற்போது வெள்ளத்தின் சவாலை எதிர்கொள்கிறோம். "என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, வெள்ளம் ஏற்பட்டது, எனது படிப்புக்காக நான் முழுமையாக பள்ளியை நம்பியுள்ளேன்.அதனால் நான் படகில் பள்ளியை அடைய முடிவு செய்தேன்". கடின உழைப்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதால் வாழ்க்கையில் சவால்களுக்கு பயப்படுவதில்லை.என் பகுதியில் உள்ள பல பெண்கள் பள்ளிக்குச்செல்வதில்லை, ஏனென்றால் அவர்கள் வெள்ள நீருக்கு பயப்படுகிறார்கள்.ஆனால் எனக்கு பயப்பட நேரமில்லை. எனது குறிக்கோள் எனது இலக்கை அடைய நான் தினமும் கடினமாக உழைக்கிறேன் இவ்வாறு சந்தியா சஹானி கூறினார்.