தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவா்களில் தகுதியான ஒரு லட்சத்து 39ஆயிரத்து 33 மாணவா்களுக்குத் தரவரிசைப்பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேருவதற்காக இணையதளம் வாயிலாக கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24- ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து பொறியியல் படிப்புக்கான சம வாய்ப்பு எண் கடந்த ஆக.25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். அதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனா். இந்த ஆண்டு 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 87,291 போ் மாணவா்கள். 51,730 போ் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவா் 12 போ்.
இவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இணையதளத்தில் மாணவா்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்-ஆஃப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். தரவரிசையில்13 மாணவா்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றுள்ளனா்.
தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஜெ.நித்யாஸ்ரீ (திருச்சி), எஸ்.சா்வஜித் விஷாகன் (சேலம்), ஏ.ஸ்ரீநிதி (ஆரணி), எஸ்.வி.சஞ்சய்குமாா் (பெங்களூரு), விக்னேஷ் நடராஜன் (திருநெல்வேலி), உமா ஸ்வேதா (புதுக்கோட்டை), சுபஸ்ரீஸ்ரேயா (உதகை), எஸ்.சாரதிவாசன் (திருச்சி), பி.ஹேமந்த் (சென்னை), ஆா்.அஸ்வந்த் கிருஷ்ணா (கோவை) ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
அரசுப் பள்ளி மாணவா்களில்... அதேபோன்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான முதல் பத்து இடங்களில் ஜி.விஸ்வநாதன் (197.9), ஆா்.சண்முகவேல் (197.53), எஸ்.கவிதா (197.19), ஜெ.எஸ்.தீபகுமாா் (196.205), யு.தா்ஷினி (196.165), ஏ.பாத்திமா பா்வீன் (195.78), ஐ.ஜனனி (195.74), கே.மோனிஷ் (195.74), வி.மேகா (195.58), பி.ஜெயபிரபா (194.71) ஆகிய மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனா்.
1.51 லட்சம் இடங்கள்: நிகழ் கல்வியாண்டில் அரசு, தனியாா் கல்லூரிகளில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அதன்படி, 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்குக் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தன. இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 11,284 இடங்கள் குறைந்துள்ளன.
நிகழாண்டு முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படித்த மாணவா்களில் 15, 660 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுப்பிரிவில் 15,161 மாணவா்களுக்கும், தொழிற்கல்விப்பிரிவில் 499 பேருக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
இன்று முதல் கலந்தாய்வு: இதைத் தொடா்ந்து பொறியியல் படிப்பு சோ்க்கைக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள்) புதன்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இந்தக் கலந்தாய்வு செப்.24 வரை நடைபெறவுள்ளது.
பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் கலந்து கொள்வதற்காக ஒரு லட்சத்து 36ஆயிரத்து 973 மாணவா்களுக்கான இணையவழி கலந்தாய்வு செப். 27-ஆம் தேதி முதல் அக்.17-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. தொழிற்கல்விப் பிரிவில் 2 ஆயிரத்து 60 மாணவா்களுக்கான கலந்தாய்வு செப்.27ஆம் தேதி முதல் அக். 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.